யாழ் போதனா வைத்தியசாலையில் போராட்டம்!

Friday, June 24th, 2016

யாழ் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை பிரிவு தாதியர் ஒருவர் பணியிறக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  வைத்தியசாலை சத்திர சிகிச்சை பிரிவு தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சத்திர சிகிச்சை மூலம் பிறந்த சிசு இறந்தமைக்கு குறித்த தாதியரின் கவனயீனம் காரணம் என்று கூறி அவர் பணியிறக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை கண்டித்து தாதியர்கள் பணிப்பறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று (24)காலையில் இருந்து தாதியர் சங்கத்தினர்  வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: