யாழ் போதனா வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

யாழ்.போதனா வைத்தியசாலையின் முன்றலில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கான அறைகூவலை தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை விடுத்துள்ளது.
அண்மைக்காலமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சையின் போது மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதனை தடுக்கும் முகமாக வைத்தியசாலை முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டம் (09.10.2017) அன்று நாளையதினம் காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பலர் யாழ்.போதனா வைத்தியசாலையில் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதனைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கிணற்றடியில் வழுக்கி விழுந்த குடும்பஸ்தர் பலி!
தென்னை முறிந்து வீழ்ந்ததால் மாணவன் காயம் - மீசாலையில் சம்பவம்!
20 ஆவது திருத்தம் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களை பறிக்கும் - தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான ...
|
|