யாழ் பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளவத்தைக்கு புதிய சேவை!

Wednesday, July 13th, 2016

எதிர்வரும்  (15) ஆம் திகதி வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய பஸ் சேவை யொன்றை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

இலங்கைப் போக்குவரத்துச் சபை யாழ் சாலையும் ஹோமாகம சாலையும் இணைந்து நடத்தவுள்ள இந்த சேவை தினமும் வெள்ளவத்தையில் இருந்து இரவு 7 மணிக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் இரவு 10 மணிக்கும் யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், புத்தளம் ஊடாக நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது.

இச் சேவைக்கான ஆசன முற்பதிவுகளை யாழ். மத்திய பஸ் நிலையத்திலும் வெள்ளவத்தை புகையிரத நிலையத்திலும் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.சாலை முகாமையாளர் குணபால செல்வம் தெரிவித்துள்ளார்.

Related posts: