யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டம்!
Thursday, February 17th, 2022யாழ்.பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலை மூடி இன்றையதினம் மாணவர்கள் பாரிய முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த பல மாதங்களாக செயலிழந்து கிடக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை அங்கீகரிக்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த போராட்டம் காரணமாக பல்கலைகழக ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழையமுடியாத நிலையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா இன்றையதினம் பரீட்சைகள் நடந்து கொண்டிருப்பதால் வாயில் கதவை திறக்கும் படியும், பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் மாணவா்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
என்ற போதும் எழுத்தில் முன்வைத்த கோரிக்கை 4 மாதங்களாக எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டி மாணவா்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|