யாழ். நகரிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் இரவு வேளைகளில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தப்  பொலிஸார்  தீவிர ரோந்து!

Thursday, July 21st, 2016

 

யாழ். நகரிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் இரவு வேளைகளில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் முகமாகப் பொலிஸாரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் கோட்டை, முற்றவெளிப் பகுதி, முனியப்பர் கோவிலடி, பண்ணை ஆகிய பகுதிகளில் போதப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனையைத் தடுக்கும் முகமாக போலிஸார் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருவதுடன் வீதிகளில் கூ டுவோர் மற்றும் சந்தேகத்துக்கு இடமாக நடமாடுவோர் மறிக்கப்பட்டுத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Related posts: