யாழ். தேசிய கல்வியியல் கல்லூரியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்!
Thursday, February 7th, 2019யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் நீண்டகாலமாக உள்ளன என்று கல்விச் சமூகம் தெரிவித்தது.
நூலக உதவியாளர், ஆய்வு கூட உதவியாளர், சாரதி, கட்டட வேலை செய்பவர், மின் வேலை செய்பவர், பாதுகாப்பு அலுவலர், சுகாதாரத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 34 வகையான வேலைகளுக்கு சுமார் 50 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
இது தொடர்பில் கல்லூரி நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது: கல்விசாரா ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்பித்தாருங்கள் என்று கல்வி அமைச்சின் அனைத்துக் கூட்டங்களிலும் கோரிக்கை முன்வைத்தோம். இறுதியாக வந்த மதிப்பீட்டுக் குழுவுக்கும் இதுபற்றித் தெரியப்படுத்தியுள்ளோம் ஆனால் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
விமான போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப நான்கு ஆண்டுகள் ஆகும் – சர்வதேச விமான போக்குவரத்து சங்க...
வழமை நிலைக்கு திரும்பியது நெடுந்தீவு - முடக்கப்பட்டதுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்கிறார் மாகாண சு...
மக்களுக்கான நிவாரணங்கள் விரைவில் வழங்கப்படும் - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|