யாழ்.குருநகர் பகுதியில் கடலாமை இறைச்சியுடன் நால்வர் விசேட அதிரடிப் படையினரால் கைது !

யாழ்ப்பாண பகுதியில், கடலாமை இறைச்சியுடன் நால்வர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடைப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் குருநகர் பகுதி வீடு ஒன்றினை சோதனையிட்ட போது அங்கே நான்கு கடல் ஆமைகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில் அந்த வீட்டில் இருந்த குருநகர் பகுதியை சேர்ந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு 4 கடல் ஆமையின் பாகங்களும் விற்பனைக்கு தயாராக இருந்த இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கடல் ஆமை இறைச்சி மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் விசேட அதிரடிப்படையினரால் யாழ்ப்பாணம் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளார்கள்.
Related posts:
நெடுங்கேணியில் 17 வயது சிறுமி மாயம்!
சகோதரிகள் அட்டகாசம் – குழப்பத்தில் வட்டுக்கோட்டை பிளவத்தை அ.த.க பாடசாலை!
எமக்கான தீர்வினை பெற்றுக் கொள்வதற்காகவே இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம் - வாகன இறக்குமதியாளர் சங்க...
|
|