யாழ்.குடாநாட்டில் 7,900ஹெக்ரேர் நெற்செய்கை பாதிப்பு – மாவட்ட விவசாயப் பணிப்பாளர் !

Thursday, February 16th, 2017

யாழ்.மாவட்டத்தில் காலபோகத்தில் 10,419 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொளளப்பட்டது அதில் 7,900ஹெக்ரேயர் (72வீதம்) பாதிக்கப்பட்டுள்ளது உரிய காலப் பகுதியில் மாரி மழை பொய்யாத நிலைமையும் கடும் வறட்சி வெப்பநிலை வீச்சு அதிகரிப்புமே நெற்செய்கை சேதமடைந்தமைக்குக் காரணமாகும் என யாழ்.மாவட்ட விவசாய திணைக்களப் பணிப்பாளர் செல்வாசா தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்ட விவசாயிகள் ஆர்வத்தோடு நெற்செய்கையில் ஈடுபட்டனர் காலபோக நெற்செய்கை 10,419 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்ட்டது. மாரி மழை உரிய காலப்பகுதியில் பொய்யாமல் பொத்தமை மற்றும் கடும் வறட்சியோடு கூடிய வெப்பநிலை நெற்செய்கையில் 7,900ஹெக்ரேயர் சேதமடைந்திருப்பதாக அறியப்பட்டுள்ளது இது மொத்தமாக நெற்செய்கையில் 72வீதமாகும்.

வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்காத நிலையில் புல் பூண்டுகள் மற்றும் களைகள் உரிய வேளையில் பிடுங்கி அழிக்கவோ களை நாசினிகளை விசிறவோ முடியாமல் போய்விட்டதால் நெற்பயிர்கள் வளர்ச்சியிலும் பார்க்க களைகளின் வளர்ச்சி கூடியுள்ளது நெற்செய்கை ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் சேத விவரங்கள் உரிய முறையில் திரட்டப்பட்டுள்ளன. பாதிப்புக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது – என்றார்.

DSC08186

Related posts: