யாழ். குடாநாட்டின்  பிரதான சந்திகளில் வீதிச் சமிக்ஞை விளக்குகள்!

Thursday, May 26th, 2016

யாழ். குடாநாட்டில்  அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்காக பிரதான சந்திகளில் வீதிச் சமிக்ஞை விளக்குகளைப் பொருத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அந்த வகையில் யாழ். ஆஸ்பத்திரி வீதியில் வேம்படிச் சந்தி, ஆரியகுளம் சந்தி, வின்சர் சந்தி, பருத்தித் துறை வீதியில் கோப்பாய்ச் சந்தி, நெல்லியடிச் சந்தி ஆகிய இடங்களிலும் முதற்கட்டமாக வீதிச் சமிக்ஞை விளக்குகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி செயற்பாட்டின்  முதற்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் வீதி விளக்குகள் பொருத்தப்படும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related posts: