யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !

Saturday, February 25th, 2017

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை(26) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்- 05.30 மணி வரை மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி,சுன்னாகம் நகரம், கந்தரோடை, கொத்தியாவத்தை, ஜெற் மோட்டோர்ஸ், மல்லாகம், கல்லாரை, அளவெட்டி, தெல்லிப்பழை, பன்னாலை, சிறு விளான், தெல்லிப்பழை மாவட்ட வைத்தியசாலை, சுன்னாகம் கார்கில்ஸ், மல்லாகம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி, சுன்னாகம் மக்கள் வங்கி, சுன்னாகம் இலங்கைத் தொலைத் தொடர்பு சேவை நிலையம், தோப்பு, அச்சுவேலி நகரம், அச்சுவேலி வைத்தியசாலை வீதி, பலாலி தெற்குச் செல்வநாயகபுரம் பாரதி வீதி, பத்தமேனி, தம்பாலை, இடைக்காடு, வளலாய், அச்சுவேலி வல்லை வீதி, விஜிதா மில் ஆகிய பகுதிகளில் மின்தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.
1-Copy5-620x336

Related posts: