யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !

Friday, January 27th, 2017

 

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை(26) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி, உடுப்பிட்டி வாசிகசாலை, உடுப்பிட்டி வி.சி, நாச்சிமார் கோவிலடி, இலந்தைக்காடு, கொற்றாவத்தை, பொலிகண்டி ஆலடி, நெடியகாடு, வல்வெட்டித்துறை, வெள்ள றோட், உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சி அம்மன் கோவிலடி,பாரதிதாசன் வீதி,பழைய பொலிஸ் நிலையம், பொக்கணைச் சந்தி, கெருடாவில், தொண்டைமானாறு, மயிலியதனை, சிதம்பரா வடக்கு ஆகிய பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Tamil_News_12160456181

Related posts: