யாழ். காரைநகர்க் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு 19 வரை விளக்கமறியல்!

Tuesday, July 11th, 2017
 

யாழ். காரைநகர்க் கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(09) அதிகாலை அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மூவரையும் எதிர்வரும் – 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றப் பதில் நீதவான் ஜோய் மகிழ்தேவா உத்தரவிட்டுள்ளார்.

யாழ். காரைநகரிலிருந்து 13 கடல் மைல் தொலைவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(09) அதிகாலை அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த மீனவர்கள் மீன்பிடிப்பதற்குப் பயன்படுத்திய படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் காரைநகர்க் கடற்படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று மீனவர்களையும் நேற்றைய தினம் பொறுப்பேற்ற கடற்தொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அதிகாரிகள் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் வாசஸ்தலத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்திய போதே ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாணவர் சீருடை பெறுவதற்கான வவுச்சர் நவம்பரில் விநியோகம்!
தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட் மரணம்!
எட்டு வருடங்களில் இரட்டிப்பாக அதிகரித்த வாகனங்களின் எண்ணிக்கை - அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா!
விலை அதி­க­ரிப்­பது தொடர்பில் தீர்மானம் எதுவுமில்லை– பெற்றோலியத் துறை அமைச்சு!
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை!