ஆடை அணிந்து பார்ப்பது முற்றாக தடை செய்யப்பட வேண்டும் – ஆடை விற்பனை நிலையங்களுக்கு சுகாதார அமைச்சு கடும் நிபந்தனை விதிப்பு!

Wednesday, June 3rd, 2020

ஆடை விற்பனை நிலையங்களில் ஆடை கொள்வனவு செய்யும் போது ஆடை அணிந்து பார்த்து கொள்வனவு செய்வது முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் சுகாதார பரிசோதகர் அனில் ஜாசிங்க வெளியிட்ட சுகாதார ஆலோசனைக்கு அமையவே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தக நிலையங்களுக்கு ஆடை அணிந்து பார்க்க கூடாதென குறிப்பிடப்பட்டுள்ளது. கொள்வனவு செய்த ஆடையை மீண்டும் மாற்றாமல் இருப்பதற்கு கடுமையான கொள்கை ஒன்று காணப்பட வேண்டும் எனவும் அந்த ஆலோசனை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

அத்துடன் இந்த விடயத்தை ஆடை அணிந்து பார்க்கும் இடத்திலும் பணம் செலுத்தும் இடத்திலும் பகிரங்கப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாடிக்கையாளர்கள் கடைகளுக்குள் நுழைவதனை கட்டுப்படுத்துவதற்கும் வர்த்தக நிலையங்களுக்குள் வரும் வாடிக்கையாளர்களின் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த ஆலோசனை குறிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: