யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மீண்டும் ஒரு நாடாளுமன்ற உறுப்புரிமை அதிகரிப்பு!

திருத்தப்பட்ட தேர்தல் பதிவேட்டின் படி கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஆசனம் குறைக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் சுட்டிகாட்டியுள்ளன.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாக்காளர் பதிவேட்டின்படி யாழ்ப்பாணத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஆசனம் ஒன்றினால் குறைக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கியே யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதி அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஐ. நா.சபையின் 71 ஆவது பொதுச் சபை கூட்டம் இன்று ஆரம்பம்!
பூநகரி முட்கொம்பன் பகுதி கல்வி வளர்ச்சிக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி தொடர்ந்தும் பங்களிப்பை வழங்கும் - ...
நெருக்கடிக்கு மத்தியில் மின் கட்டணம், எரிவாயு மற்றும் எரிபொருள் கட்டணங்கள் தற்போது அதிகரிக்கப்பட மாட...
|
|