யாழ்ப்பாண மாநகர சபைக்கான உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் கையளிப்பு!

Tuesday, March 13th, 2018

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான விகிதாசாரப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விவரங்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளன.

பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலின்போது யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான 27 வட்டாரங்களுக்கான உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். விகிதாசார உறுப்பினர்களின் பெயர்களைத் தற்போது கட்சிகள் பரிந்துரைத்துள்ளன. இதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் ந. லோகதயாளன் மற்றும் பெண் உறுப்பினரான பி.நளினா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று ஈ.பி.டி.பி கட்சியின் சார்பில் ப.யோகேஸ்வரி, ச.அனுசியா, நா.ஜெயந்தினி, மு.றெமீடியஸ், கு.செல்வவடிவேல், கா.வேலும்மயிலும் (ஜெகன்), கி.டேனியன், து.இளங்கோ(றீகன்) ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சி.குலேந்திர்ராசா வி.விஜயதர்சினி ஆகியோரின் பெயர்களும் சிபார்சு செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வி.மணிவண்ணன், த.அஜந்தா, சி.சுகந்தினி, தி.சுபாசினி ஆகியோரின் பெயர்களும் சிபார்சு செய்யப்பட்டுள்ளன.

உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நாளைமறுதினம் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: