யாழ்ப்பாணம் வருகின்றார் ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி யாழ்ப்பாணப் வரவுள்ளார் எனவும் இந்தப்பயணத்தின்போது பல நிகழ்வகளில் கலந்துகொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுப்பதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். இருப்பினும், இறுதி நேரத்தில் அந்தப் பயணம் இடைநிறுத்தப்பட்டது.
கறித்த விஜயத்தின் போது காங்கேசன்துறை மேற்கில் மாம்பிராய் மாங்கொல் பகுதியில் 238 ஏக்கர் காணி மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. வள்ளுவர் புரத்தில் இதுவரை விடுவிக்கப்படாத காணிகளும் விடுவிக்கப்படவுள்ளன.
மேலும், மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியில் பலாலியில் அமைக்கப்பட்ட வீடுகள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளன.
இதனைவிட, கோட்டைப் பகுதியில் மரம் நடுகை நிகழ்விலும், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘ஜனாதிபதிக்குத் தெரிவியுங்கள்’ அலுவலகத் திறப்பு விழாவிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்கிறார்.
Related posts:
|
|