யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் திண்மக்கழிவு சேகரிப்பு பெட்டிகள்!

Tuesday, December 19th, 2017

யாழ்.மாநகர பிரதேசத்தில் திண்மக் கழிவகற்றல் செயற்றிட்டத்தின் கீழ் மக்கள் தமது திண்மக் கழிவுகளை போடுவதற்கான சேகரிப்பு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

உக்கும் உக்காத மற்றும் பொருட்களை சேகரிப்பதற்கென தனித்தனியாக சேகரிப்பு பெட்டிகள் வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசாங்க அலுவலகங்களை அண்மித்த பகுதிகளில் இந்தத் திண்மக் கழிவுகள் சேகரிப்பதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

 யாழ். நகர் உட்பட்ட மாநகர பிரதேசங்களில் இந்தத் திண்மக்கழிவுகள் சேகரிப்பு பெட்டிகள் வைக்கப்படவுள்ளதாகவும் மாநகர பிரதேசத்தில் வைக்கப்பட்ட திண்மக்கழிவுகள் சேகரிப்பு பெட்டிகளுக்கு மேலதிகமாக இப் பெட்டிகள் வைக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: