யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் தாதியர்கள் அடையாள பணிப் புறக்கணிப்பு!

Friday, June 11th, 2021

அரச தாதியர்கள் சங்கம் உள்ளடங்கலான “சுகாதாரத் தொழிற் சங்க ஒன்றிணைப்பு” இன்றையதினமும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலை தாதியர்கள் ஊழியர்கள் உட்பட 26 தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து 15 கோரிக்கைகளை முன்வைத்து இன்று பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தனர்

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் தாதியர்கள் இன்றையதினம் அடையாள  பணிபுறக்கணிப்பில்  ஈடுபட்டுள்ளதோடு யாழ் போதனா வைத்தியசாலை முன்றலில் பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்திலும்  ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் ஊழியர்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து 15 கோரிக்கையை முன்வைத்து இன்று வெள்ளிக்கிழமை வைத்தியசாலை நிர்வாக காரியாலயத்துக்கு முன்னால் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் வைத்தியசாலை நிர்வாக காரியாலயத்துக்கு முன்னால் காலை 7 மணிக்கு ஒன்றுகூடி பகல் 12 மணிவரையும்பணிப்பகிஷ்கரி  ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது தமது கோரிக்கைகளை அரசு செவிசாய்க்காவிட்டால்; தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகபணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Related posts:


பிரதான அலுவலகத்துக்கு பொதுமக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடை நிறுத்தம் – குடிவரவு - குடியகல்வு திணை...
ஆசிரியர்களின் போராட்டத்தை அனுமதிக்க முடியாது - கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
பண்டிகை காலத்தில் மக்களை ஏமாற்றும் கும்பல் குறித்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண எச்ச...