யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் விபத்து : ஒருவர் பாடுகாயம்!

Friday, September 30th, 2016

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலிருந்து ஸ்ரான்லி வீதி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் மோதியமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாகன விபத்தில் படுகாயமடைந்தவர் அரியாலையைச் சேர்ந்த கார்த்திகன் வயது 22 எனவும் இவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: