யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயம் தனிமைப்படுத்தப்பட்டது!

Sunday, April 25th, 2021

சுகாதார வழிமுறைகளை பின்பறங்றியமை தொடர்பான குறிறச்சாடடை அடுத்து யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயம் இன்று சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரப் பிரிவினரின் அனுமதி பெறாது பாடசாலை நிர்வாகமானது சனசமூக நிலையம் ஒன்றுக்கு விளையாட்டு நிகழ்வு நடத்துவதற்கு பாடசாலை மைதானத்தினை வழங்கியதன் காரணமாகவே இன்றையதினம் குறித்த பாடசாலை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றையதினம் சனசமுக நிலையத்தின் விளையாட்டுப் போட்டி விமரிசையாக இடம் பெற்றதோடு பல நூற்றுக் கணக்கான மக்களும் அந்த விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அடிப்படையில் இன்றையதினம் குறித்த பாடசாலை மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியன சுகாதார தரப்பினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: