யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் துணைக் கொத்தணிகள் – அதிகாரிகள் எச்சரிக்கை!
Friday, April 23rd, 2021புத்தாண்டைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல பகுதிகளில் கொரோனா துணைக் கொத்தணிகள் உருவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துணைக் கொத்தணிகள் குருநாகல், நாரம்பல, அல்லவா, கம்பஹா, கொழும்பு, புத்தளம், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் தோன்றியுள்ளதாகவும் பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்..
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் – .
தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், சுகாதார அமைச்சு நாள் ஒன்றிற்கு 15 ஆயிரம் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
அத்துடன் நிலைமையைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், மீண்டும் ஒரு ஆபத்தான இடமாக கொழும்பு மாறுவதுடன், புதுடெல்லியின் நிலை போன்ற பாதிப்பை எதிர்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.
இது ஒரு முன் எச்சரிக்கை மட்டுமே என்றும், வரவிருக்கும் மூன்று வாரங்கள் முக்கியமானதாக இருக்கும் என்றும், சுகாதார வழிகாட்டுதல்களை மிக முன்னுரிமையுடன் பராமரிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|