யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 36 மாணவர்களுக்கு 9 ஏ!

Saturday, March 31st, 2018

கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற க. பொ. த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் (30) இரவு வெளியாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் 36 மாணவர்கள் 9 ஏ சித்தி பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

இதன் பிரகாரம் பிரபாகரன் அர்ச்சுன், ஆனந்தராஜா டினுஜன், செல்வவிக்கினேஸ்வரராஜ்  கோபிகிஷன், தேவரஞ்சன் யுதுர்சன், ஸ்ரீரஞ்சன் லோகஜன், சண்முகலிங்கம் லக்ஸன்,ஜெயச்சந்திரன் மாதவன், விமலேந்திரநாதன் வேணுகரன், பாஸ்கரக்குருக்கள் பிரவீணசர்மா, குகதாஸன் சரண், சூரியகுமரன் துவாரகன், ஜெயக்குமார் அகிலன், குணசீலன் ஆரோகணன், சாத்தியபரன் சகீர்தன், சூரியகுமார் சாரூஜன், பத்மானந்தன் அபிராம், சுரேஷ் பிருந்தாபன், அமலதாஸ் யதுர்சன், தயாளன் சாருஜன், ரட்ணம் அபர்ணன், கோணேஸ்வரன் காருஷன், யோகராஜா கெளரிசங்கர், சோதிலிங்கம் நிவேதன், கருணாகரன் பதுசனன், தர்மதயாளன் சங்கீதன், கோடிஸ்வரன் அனுஷன், கிருபானந்தா ஆரூரன் , ஜோன் பீற்றர் சார்ள்ஸ், நவரட்ணம் ஹரிகிஸ்ணா, தயாபரக்குருக்கள் கஜலக் ஷணன், பூபாலசிங்கம் நிலக்ஸன், முரளிதரன் பிரகாஜன், சிவனேஸ்வரன் சஞ்சீவன், யூட்நிர்மலன் ஸ்ரீவ் நிவேதன், சிவராசா தனலக்ஸன், குமாரரட்ணம் உமாகாந்தன் ஆகிய மாணவர்களே ஒன்பது ஏ சித்திபெற்றுள்ளனர்.

இந்தக் கல்லூரியில் மொத்தமாக 238 மாணவர்கள் க. பொ. த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் அனைத்து மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். இதன் மூலம் இந்தக் கல்லூரியில் நூறுவீத சித்தி பதிவாகியுள்ளது.

Related posts:


சுயாட்சி என்ற சொல்லுக்கு வேறு தமிழ்ச் சொற்களைத் தேடிக்கொண்டு திரியாதீர்:  அந்த வார்த்தைக்குள் அனைத்த...
தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டு ஒன்றிணையுங்கள் - அனைத்து அரசியல் கட்ச...
2 மாதங்களின் பின் மீண்டும் தொழிலை முன்னெடுக்கும் தமிழகை மீனவர்கள் - இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தக் ...