சுயாட்சி என்ற சொல்லுக்கு வேறு தமிழ்ச் சொற்களைத் தேடிக்கொண்டு திரியாதீர்:  அந்த வார்த்தைக்குள் அனைத்தும் உண்டு! – இரா.செல்வவடிவேல்  

Tuesday, May 10th, 2016

யுத்தகாலத்திலும்சரி, யுத்தம் முடிவுபெற்றதன் பின்னரான காலத்திலும்சரி மேடைகளில் தமிழ்த் தேசியம் பேசி நாடாளுமன்றத்திற்குப் போவதை மட்டும் இலட்சியமாகக் கொண்டவர்களுடைய பேச்சுக்களை நீங்கள் கேட்டு மகிழ்ந்திருக்கின்றீர்கள். ஆனால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் போலிப் பேச்சுக்களை பேசி அதிகாரங்களுக்கு வருவது கிடையாது என தேசிய எழுச்சி மாநாட்டில் உரையாற்றிய இரா.செல்வவடிவேல் தெரிவித்துள்ளார்.

கட்சியின்; தேசிய எழுச்சி மாநாட்னல் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினுடைய கொள்கைகள் தான் சரியாதென்று இன்று கூட்டமைப்பினுடைய தலைவரே வந்ததுள்ளது மட்டுமல்ல, மூன்று தினங்களுக்கு முன்னர் பத்திரிகையில் இந்த நாட்டைப் பிரிப்பதற்கு ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன் என்று உரத்துப் பேசியிருக்கிறார். இது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் பாதைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள் என்பதை உறுதிசெய்துள்ளது.

1987இற்கு முற்பட்ட காலம் இந்த நாட்டில் போராளிகளாக இருந்து இந்த நாட்டையும் இந்த மண்ணையும் நேசித்தவர்கள்  பலர்.  அந்தக் காலத்திலிருந்த அனைத்து இயக்கங்களும் எங்கள் மண்ணைத் தொட்டவர்களின் கால்கள் எங்கள் நிலத்திற்கு உரமாக்கியவர்கள்.

எங்கள் பெண்களைத் தொட்டவர்களின் கைகள் எங்கள் அடுப்புக்கு விறகாகும் என்று பேசிய இளைஞர்கள்தான் 1987களுக்கு முதல் நாம் கண்ட இலட்சிய புருஷர்கள்.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் எல்லாம் நீங்கி 2009ற்குப் பின்னர் இங்கு ஒரு தெளிவான சூழ்நிலை ஏற்பட்டதற்குப் பின்னர்கூட இந்தத் தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினைகளுக்கு சரியானதொரு தீர்வை வைக்கமுடியாத ஒரு தலைமைதான் ஆட்சிப்பீடத்தில் இருக்கிறார்கள்.

வடமாகாண சபையில் ஒரு தீர்மானம், அரசியல் தீர்வுத்திட்டம். அதைப் பொறுப்பேற்று அமைப்பவர் வடமாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன். ஆனால், அந்தத் தீர்மானம் என்னவென்று தெரியாத ஒரு தலைவர் கூட்டமைப்பின் சம்பந்தன். இப்படிப்பட்டதொரு முறையைக் கொண்டவர்கள் தான் இன்று ஆட்சியில் இருப்பவர்கள். அவர்களுடைய ஆட்சிதான் வடமாகாண சபையில் நடக்கிறது.

வடமாகாண சபை ஒரு தீர்வை முன்வைப்பதாகவும் அந்தத் தீர்வுத் திட்டத்தை இன்ம் கொடுக்க முடியாமல் தவிக்கின்ற ஒரு அரசியல்வாதிகள்தான் இங்கே இருக்கிறார்கள்.

இங்கே வந்திருக்கின்ற கொள்கைப்பற்றுள்ள எமது கட்சியின் தூண்களாக இருக்கின்ற உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லி வைக்க விரும்புகிறேன். எப்பொழுது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்கின்ற கோஷத்தை முன்வைத்து இன்;றுவரை அந்த கோஷத்திலிருந்து மாறாமல் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்ற ஒரு நேர்மையான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைச் நான் சந்தித்திருக்கின்றேன். அது வேறு யாரும் அல்ல டக்ளஸ் தேவானந்தா தான் என தனது வாழ்த்துச்செய்தியில் சொல்லியிருக்கின்றார். அப்படியான ஒருவரை தலைமையாக கொண்டிருக்கும் எமது செயலாளர் நாயகத்தை நாம் அரசியல் ரீதியில் மேலும் பலப்படத்த வேண்டும்.

இன்று நாடாளுமன்றத்தில் இருக்கும் 29 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரே ஒருவர்தான் வினாக்களைத் தொடுக்கிறார் அந்த வினாக்களக்கு மற்றையவர்கள் பதிலளிக்க முடியாமல் ஓடி ஒளிகின்ற காட்சியைத்தான் நாங்கள் நாடாளுமன்றக் காட்சியா இன்று தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே, எங்களுடைய கொள்கை எப்பொழுதும் சொல்வதைச் செய்வது செய்வதையே சொல்வது என்பதுதான். எப்போது மாநிலத்தில் சுயாட்சி என்ற கோஷம் வைக்கப்பட்டதோ, அன்றிலிருந்து இன்றுவரை அதுதான் எமது கோஷம்.

சுயாட்சி என்ற வார்த்தைக்கு வேண்டுமானால் இவர்கள் வேறு தமிழ்ச் சொற்களைத் தேடிக்கொண்டு திரியலாமேதவிர, சுயாட்சி சுயாட்சிதான். அந்த சுயாட்சி என்ற வார்த்தைக்குள்ளே இவர்கள் சொல்லுகின்ற அத்தனை தீர்வுத்திட்டங்களும் வந்துவிடும். இதனை மனதில் வைத்துக்கொண்டு எங்கள் வழி தனிவழி. எங்கள் பாதை வெற்றிக்கான பாதை. எங்களுடைய பாதை தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற பாதை என்பதை இங்கே உள்ள அத்தனைபேரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

வெறும் வீரத்திற்காக மக்களை ஏமாற்றுவதற்காக மக்களிடத்தில் வாக்குக் கேட்பதற்காக பேசக்கூடியவர்கள் இந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் மக்களுடைய பிரச்சினைகளை எங்களுடைய பிரச்சினைகளாக ஏற்றுக்கொண்டு அவர்களை வழிகாட்ட வேண்டும் என்பதுதான் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கொள்கையும் செயற்பாடும் என்பதை மறந்துவிடாதீர்கள்எ என தெரிவித்தார்.

Related posts: