யாழ்ப்பாணப் பல்கலையின் பன்னாட்டு ஆராச்சி மாநாடு!

Tuesday, September 25th, 2018

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஏற்பாட்டில் இரு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடு எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் மருத்துவ பீடத்தில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கி என்ற தொனிப்பொருளில் இந்த வருடத்துக்கான மாநாடு நடைபெறவுள்ளது.

நிகழ்வில் ஆஸ்திரேலியா, பிரித்தானியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த 7 வல்லுநர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சமூக விஞ்ஞானம், முகாமைத்துவம், உல்லாசத்துறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர்கள் விரிவுரையாற்றவுள்ளனர்.

அனைத்து நாட்டு எழுத்தாளர்களால் இணைந்து உருவாக்கப்பட்ட 121 ஆராய்ச்சிக் கட்டுரைகளும் நிகழ்வில் வாசிக்கப்படவுள்ளன. ஆராச்சி கட்டுரைகளின் மீதான ஆய்வு மருத்துவ பீடம், மற்றும் கைலாசபதி கலையரங்கு ஆகியவற்றில் பகுதி பகுதியாக நடைபெறும்.

Related posts: