யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 500 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தம்!

Wednesday, July 13th, 2016

நாடு முழுவதுமுள்ள பல்கலைக் கழக மானிய ஆணைக் குழு பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனப் போதனை சாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்றுச் செவ்வாய்க்கிழமை(13) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை வியாழக்கிழமையும்(14) குறித்த வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது. குறித்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 500 வரையான ஊழியர்கள் இன்று புதன்கிழமை(13) காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல்கலைக்கழகத்தின் அன்றாடச் செயற்பாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மாதாந்த இழப்பீட்டுப் படியை அதிகரித்தல், சேமலாப நிதி, நம்பிக்கை நிதியம், ஓய்வூதியம் என்பவற்றைக் கணிப்பீடு செய்கையில் மாதாந்த இழப்பீட்டுப் படியையும் கருத்தில் கொள்ளல், ஆக்க பூர்வமான ஓய்வூதியத் திட்டத்தை ஏற்பாடு செய்தல், ஓய்வூதியத்திற்குரிய வயதை 57 இலிருந்து 60 ஆக மாற்றுதல், 2016 இல் அரச திணைக்களங்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வினைப் பல்கலைக் கழகங்களுக்கும் வழங்குதல், நிறுத்தப்பட்ட மொழிக் கொடுப்பனவை மீள வழங்கல் ஆகிய முக்கிய கோரிக்கைகளுடன் பல்கலைக் கழக நியமனங்களில் அரசியல் தலையீடு நிறுத்தப்பட வேண்டும், பல்கலைக் கழக ஊழியர்களிடம் பாரபட்சம் காட்டுதல் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தே யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

20160713_103820

20160713_104147

Related posts: