யாழ்ப்பாணத்தை நெருங்கும் ‘கஜா’ புயல் – அச்சத்தில் மக்கள்!

Wednesday, November 14th, 2018

வடக்கின் பல இடங்களில் இன்றும் நாளையும் கடுமையான காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை நிலவும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் யாழ்ப்பாண குடாநாட்டுக்கு அருகில் பயணிப்பதால், அங்கு கடுமையான காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது நாளையதினம் தமிழ் நாட்டில் தரைத்தொடும்.

இதனால் மன்னார், புத்தளம், திருகோணமலை, அனுராதபுரம், பொலனறுவை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் மணிக்கு 80 கிலோமீற்றர் என்ற வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை , நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறியளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Untitled-4 Untitled-5

Related posts: