யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று – தனிமைப்படுத்தல் 80 மாணவர்கள் !

Thursday, December 17th, 2020

மருதனார்மடம் கொரோனா பரவலில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் பாடசாலை மாணவிகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து தெல்லிப்பழையை சேர்ந்த பிரபல பாடசாலையின் மாணவகள் 80 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவிகள் இருவருக்கு நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இப் பாடசாலையில் தரம் ஏழு மற்றும் தரம் ஒன்பது ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் சகோதரிகளான இருவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாணவிகள் இருவரும், மருதனார்மடம் தொற்றாளருடன் தொடர்பைப் பேணியவர்களுள் இரண்டாவது நாள் இனங்காணப்பட்ட கீரிமலை கூவில் பகுதியைச் சேர்ந்த தொற்றாளரின் பிள்ளைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாணவிகள் இருவரும் கடந்த வாரம் பாடசாலைக்குச் சென்று வந்துள்ளதுடன், ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி கடந்த சனிக்கிழமையும் பாடசாலையில் இடம்பெற்ற பரீட்சை ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவிகளின் வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் என 80 இற்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

000

Related posts: