யாழ்ப்பாணத்தில் நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையை ஸ்தாபிப்பு!

Friday, March 9th, 2018

சமாதானத்தின் தந்தை என போற்றப்படும் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகர் ரொபினா பீ. மார்க்ஸ் ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து இருநாடுகளுக்கும் இடையே இடம்பெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்மற்றும் மத சகவாழ்வு என்பன குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

நெல்சன் மண்டேலா சமாதானத்தின் சின்னமாக இருப்பதாகவும், இது உலகம் முழுவதிலும் உள்ள அபிப்பிராயமாகும்.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையை ஸ்தாபிக்க வேண்டும் என்ற யோசனையை உயர்ஸ்தானிகர் முன்வைத்தமையை இட்டு தாம் நன்றி தெரிவிப்பதாக வட மாகாண ஆளுநர்குறிப்பிட்டுள்ளார்.

Related posts: