யாழ்ப்பாணத்தில் குருநகர் பகுதி முடக்கம் : வெளியாட்கள் உள்நுளைய தடை – பொலிஸார், இராணுவம் குவிப்பு!

யாழ்ப்பாணம் குருநகர் மற்றும் பாசையூர் பகுதிகளுக்குள் வெளியாட்கள் செல்வதற்கு சுகாதார தரப்பினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேலியகொட மீன் சந்தைக்கு கூலர் வாகனங்களில் மீன் கொண்டு சென்றிருந்த நிலையில் குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவரும், பருத்துறையை சேர்ந்த ஒருவரும் பாசையூர் பகுதியில் உள்ள கடலுணவு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். குறித்த இருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் சன நெருக்கம் அதிகமுள்ள குருநகர் பகுதியில் ஏனையவர்களுக்கு தொற்று பரவுவதை தடுப்பதற்காக அப்பகுதியினை சாராத வெளி நபர்கள் உட் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நான்கு இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளது பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக யாழ்.குருநகரில் உள்ள கடலுணவு நிலையத்தில் பணியாற்றிய இருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.நகர் ஜே-65, ஜே-67 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் முடக்கம் செய்யுமாறு மாகாண சுகாதார திணைக்களம் கொரோரோனா செயலணியிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|