யாழ்ப்பாணத்தில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்!

Wednesday, January 12th, 2022

இந்துக்களால் கொண்டாடப்படும் உழவர் திருநாளாம் தைத் திருநாள் எதிர்வரும் 14 ஆம் திகதி மலர்கின்றது.

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் இந்துக்கள் மிகவும் ஆர்வத்துடன் குறித்த பண்டிகையை எதிர்கொள்ள ஆயத்தமாகியுள்ளனர்.

குறிப்பாக சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து தமது நன்றிகளை தெரிவிப்பதற்காக மண் மற்றும் அலுமினியத்தால் ஆகிய பொங்கல் பானைகளைகளையும் பொங்கலுக்கு தேவையான இதர பொருட்களை கொள்வனவு செய்வதிலும் யாழ்ப்பாண மக்கள் ஆர்வத்துடன் காணப்பட்டனர்.

குறிப்பாக யாழ். மாநகர சபைக்குள் உள்ளிட்ட அங்காடி, நகர கடைத் தொகுதிகள் மற்றும் திருநெல்வேலி மத்திய மரக்கறிக்கடைத் தொகுதிகளிலும் சங்கானை மருதனார்மடம் சாவகச்சேரி கொடிகாமம் நெல்லியடி பருத்தித்துறை மானிப்பாய் பொதுச் சந்தைகளில் பொங்கல் பானைகள், பொங்கலுக்கு தேவையான இதர பொருட்கள் பட்டாசுப் பொருட்களை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொள்வனவு செய்துவருவதை அவதானிக்க முடிந்தது.

Related posts: