யாழ்ப்பாணத்தில் இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

Thursday, February 4th, 2021

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம்பெற்றது.

குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று காலை இலங்கையின் 73 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்  இடம்பெற்றுள்ளது.

இதன்போது தேசியக் கொடியேற்றப்பட்டதை அடுத்து தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது..

அதனைத் தொடர்ந்து மத தலைவர்களின் ஆசியுரை, அதிதிகள் உரைகள் என்பன இடம்பெற்றன.

இதேபோன்று யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: