யாழில் 17 வயதுச் சிறுமிக்கு முதியவர் செய்த கொடூரம்!

Monday, July 9th, 2018

17 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 59 வயதுடைய முதியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குறித்த சிறுமி தனது சித்தியாருடன் வசித்து வருகின்றார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை அயலில் உள்ள 59 வயது முதியவர் நேற்று முன்தினம் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த விடயத்தை சிறுமியின் தம்பி சித்தியாருக்கு தெரிவித்துள்ளார். அவர் முறைப்பாடு செய்ததற்கு அமைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related posts: