யாழில் வாள் வெட்டுக் குழுவின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் – காயமடைந்த தனுரொக் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

Saturday, September 26th, 2020

யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த தனு ரொக் என்ற வெட்டுக் குழுவின் தலைவர்  மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெருமாள் கோவிலுக்கு முன்பாக மணிக்கூட்டு வீதியில் இன்று சனிக்கிழமை நண்பகல் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு வன்முறைக் கும்பலின் அடாவடியால் அந்த இடத்தில் விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த தனுரொக் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts: