யாழில் வரட்சியால் பயிர்ச் செய்கை அழிவு!

Tuesday, May 8th, 2018

யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் வரட்சியின் காரணமாக வெங்காயம் உட்பட்ட 1980 ஹெக்டேயர் பயிர்ச் செய்கை பரப்பு முற்றாக அழிவடைந்துள்ளது.

உரும்பிராய், இளவாழை மற்றும் மாதகல் பகுதிகளில் வெங்காய பயிர்ச் செய்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தமது பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தம்மால் பெறப்பட்ட வங்கிக்கடன்களை செலுத்துவதற்கு நிவாரணங்கள் பெற்றுத்தருமாறு குறித்த பகுதிகளை சேர்ந்தவிவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த வருடம் குறித்த விளை நிலங்களில் விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிர்ச் செய்கையில் ஈடுபட்டதாகவும் உரிய காலத்தில் விதை உருளைக்கிழங்குகள் கிடைக்காமை காரணமாக இந்தவருடம் அவர்கள் மாற்றுப்பயிர்ச் செய்கையாக வெங்காயத்தை பயிரிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: