யாழில் ரயில் மோதுண்டு இரு உயிர்கள் பலி மாணவி படுகாயம்!

Wednesday, January 17th, 2018

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் மோதுண்ட பசு மாடுகள் பல மீற்றருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டு வீதியோரத்தில் நின்ற மாணவிமீது மோதுண்டதனால் மாணவி படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து யாழ்.மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. இதில் இரு பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

யாழ். மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் கற்கும் துரைசிங்கம் கீர்த்திகா (வயது 15) என்ற மாணவி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related posts: