யாழில் பட்டப் பகலில் இளைஞன் மீது கத்திக்குத்து 

Friday, October 20th, 2017

யாழ். ஆவரங்கால் சர்வோதயா வீதியால் சென்று கொண்டிருந்த இளைஞன் மீது மோட்டார்ச் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவர் சரமாரியாகக் கத்தியால் குத்தி விட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் நேற்றைய தினம்(19) பட்டப் பகல் வேளையில் இடம்பெற்றது.  சம்பவத்தில் குறித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,
பகல் வேளையில் வீதியால் சென்று கொண்டிருந்த குறித்த இளைஞன் மீது மோட்டார்ச் சைக்கிளில் வந்த இனந் தெரியாத இருவர் கூரிய கத்தியினால் கழுத்தில் குத்தியுள்ளனர். கத்திக் குத்தின் போது கத்தி அரைவாசியுடன் முறிவடைந்துள்ளது.
இதனால் படுகாயமடைந்த இளைஞன் வீதியில் விழுந்து துடிதுடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் அப்பகுதியால் சென்ற சில இளைஞர்கள் குறித்த இளைஞனை மீட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு குறித்த இளைஞன் மாற்றப்பட்டுச் சிகிச்சை வழங்கப்பட்ட போதும் சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் இன்றைய தினம் அம்புலன்சில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மேற்படி கத்திக் குத்துச் சம்பவத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை.  இந்நிலையில் அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts: