யாழில் கொள்ளையர்கள் அட்டகாசம்!

Tuesday, July 24th, 2018

யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உந்துருளியில் நடமாடிய கொள்ளையர்களால் பெருமளவான பணம் மற்றும் நகைகள் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளது.

நேற்று இரவு 8.00 மணியளவில் யாழில் உள்ள வர்த்தக நிலையங்களில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலக்கத்தகடுகள் அற்ற மூன்று மோட்டார் சைக்கிள்களில் முகங்களை மறைத்து முகமூடி அணிந்தவாறு வந்த ஆறு பேர் கொண்ட கொள்ளையர்களால் இந்த கொள்ளைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதிகளில் வர்த்தக நிலையங்களில் கொள்ளையில் ஈடுபட்ட அவர்களால், கோண்டாவில் பகுதியில் தங்க ஆபரணங்களும் பறித்துச்செல்லப்பட்டுள்ளன.

Related posts: