யாழில் “இன்னல” கிழங்குச்செய்கை வெற்றி!

உருளைக்கிழங்கை ஒத்த “இன்னல” என்ற சிறிய வகைக் கிழங்கு ஒன்றின் செய்கை வெற்றியளித்துள்ளதாக திருநெல்வேலி விவசாய ஆராட்சி நிலையத்தில் மாவட்ட விவசாயப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்னல என்று சொல்லப்படும் சிறிய வகைக்கிழங்கு, உருளைக் கிழங்கை போன்று காணப்படும். ஆரம்பத்தில் இந்தக் கிழங்கின் செய்கை குறைந்தளவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்பட்டது.
பின்னர் உருளைக்கிழங்கின் வருகையை அடுத்து இந்த சிறிய கிழங்குச் செய்கை கைவிடப்பட்டது.
இது தென்னிலங்கையில் பரவலாக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் யாழ்ப்பாணத்தில் அதனை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் திருநெல்வேலி விவசாய ஆராட்சி நிலையத்தில் அது வெற்றியளித்துள்ளது.
உருளைக்கிழங்கு சிறியதாக இருந்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்ற தோற்றத்துடன் இந்தக்கிழங்கு காணப்படும். அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டிய தேவையில்லை. உருளைக்கிழங்கைப் போன்றே நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. மூன்று மாதத்தில் பயனைப் பெற முடியும்.
இதனைப் பயிரிடுவதற்கு சிறந்த காலப்பகுதி செப்டெம்பர் மாதம் என்பதால் இதனை பரீட்சாத்தமாக சிறிய அளவில் பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|