மே 12 ஆம் திகதி கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

Saturday, May 9th, 2020

எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 2.30 க்கு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கட்சிகள் மற்றும் கூட்டணியாக இணைந்து போட்டியிடும் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளமதானக அறிவிக்கக்பட்டுள்ளது..

இதேவேளை கொவிட் 19 பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொது தேர்தலை நடத்துவதற்கான ஏது நிலைமைகள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதநிதிகள் அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி இருந்தனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

கடந்த வாரத்தில் விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட இருந்த நிலையில் நாட்டு நிலைமையை கருத்தில் கொண்டு அவற்றை வழங்காதிருக்க தேர்தல்கள் ஆணைகுழு தீர்மானித்திருந்தது.

இந்நிலையில் வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பை அடுத்து விருப்பு இலக்கங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..

Related posts: