மேல் மாகாணத்தில் 80 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் – கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

Wednesday, December 1st, 2021

மேல் மாகாணத்தில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளதாக கமநல சேவைகள் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களில் 50 வீதமானதாக காணப்படுவதாக அதன் பணிப்பாளர் நாயகம் A.H.M.L. அபேரத்ன தெரிவித்துள்ளார்.

சுமார் 27 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலத்தில் சிறுபோக மற்றும் பெரும்போக செய்கை மீள முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆளனிப் பற்றாக்குறை மற்றும் பயிர்ச்செய்கை கைவிடப்பட்டமையால், காணிகள் தரிசு நிலங்களாகியுள்ளதாக கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் A.H.M.L. அபேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: