மூன்று பிரதேசங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்கள் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, December 19th, 2023

நாட்டின் மூன்று பிரதேசங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை நிறுவுவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வெளிநாட்டு வேலையை எதிர்ப்பார்த்து உள்ளவர்களுக்கான துரிதப்படுத்தப்பட்ட மற்றும் செல்லவுள்ள நாட்டை இலக்காக கொண்ட விசேட பயிற்சி திட்டங்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் நடத்தப்படுகிறது.

தற்போது நாடளாவிய ரீதியில் வாடகைக்கு பெறப்பட்ட கட்டிடங்களில் குறைந்தபட்ச வசதிகளின் கீழ் இந்தப் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

எனவே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ் யாழ்ப்பாணம், ஹோமாகம மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் பயிற்சி நிலையங்களை நிறுவ அமைச்சர் முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: