மூன்றாம் தவணைக்கான ஆரம்பம்!

Wednesday, September 6th, 2017

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக மூடப்பட்ட பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அரச பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக ஐந்து பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் எனவும் இந்தப் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணைக் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 21ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.கொழும்பு றோயல், கண்டி கிங்ஸ்வுட், கண்டி விஹாரமஹாதேவி, கண்டி ஸ்வர்னபாலி மற்றும் கண்டி சீதாதேவி ஆகிய பாடசாலைகள் உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக முழுமையாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts:


போக்குவரத்து சேவையிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தாருங்கள்- வடக்கு மாகாண ஜனநாயக போக்குவரத்த...
இன்று மின்வெட்டு இல்லை - எனினும் கட்டமைப்பை நிலைப்படுத்தும் செயற்பாட்டினால் மின்தடை ஏற்படலாம் - பொது...
டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரிப்பு - இதுவரை 24,523 பேர் பாதிப்பு என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் ப...