மூத்த போராளி சந்திரமோகன் காலமானார்!

Tuesday, July 5th, 2016

ஈழவிடுதலைப் போராட்டத்தின் மூத்தபோராளியும், ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவருமான தோழர் சந்திரமோகன் இன்று (05)கொழும்பில் காலமானார்.

தோழர் சந்திரமோகன் அவர்கள் எழுபதுகளில் ஈழ விடுதலை இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவராக இருந்ததுடன் போராட்டம் பற்றிய உணர்வுகளை உணர்ச்சியோடு பேசுவதில் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார்.

கடந்த சிலநாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தோழர் சந்திரமோகன் அவர்கள் தனது அறுபதாவது வயதில் தான் மிகவும் நேசித்த ஈழ மக்களைவிட்டுப் பிரிந்த இழப்பு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.

25dd6bdf-49a2-47f4-a566-a01a6832e5f5

யாழ்ப்பாணம் சங்கானையை பிறப்பிடமாகக் கொண்ட தோழர் நாராயணலிங்கம் சந்திரமோகன் அவர்கள் 1956ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதிபிறந்தார். விடுதலை வேட்கையை எரிமலைப் பத்திகையாக அச்சேற்றி அதை ஏந்தித்திரிந்து பரப்புரை செய்ததுடன் ஈழ மக்களின் விடுதலையை பெரிதும் விரும்பியவராகவும் வாழ்ந்தார்.

அத்துடன் விடுதலைப் போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்காக பல தடவைகள் சிறை சென்றது மட்டுமன்றி,நெருக்கடிகளையும் பல சவால்களையும் சந்தித்திருந்தார்.

அன்னாரின் இழப்புக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்களும் தமது இறுதி அஞ்சலிகளை தெரிவித்து வருகின்றனர்.

Related posts: