முரண்பட்ட நேர அட்டவணையால் பாதிக்கப்பட்ட ஏ.எல். பரீட்சாத்திகள்! கவனம் செலுத்துவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

நேர அட்டவணையைச் சரியான முறையில் கவனத்தில் கொள்ளாததால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சையில் சில பாடங்களுக்குத் தோற்ற முடியாது போன பரீட்சாத்திகளுக்கு ஏதேனும் உதவி வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
பரீட்சாத்திகளுக்கு இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முரண்பட்ட நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டமையே காரணமாகும். சரியான பரீட்சை நேர அட்டவணையை பரிசீலனை செய்திருந்தால் இவ்வாறான சிக்கல் நிலை ஏற்பட்டிருக்காது. மனிதாபிமான அடிப்படையில் பரீட்சாத்திகளுக்கு உதவி வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். ஒன்றுக்கொன்று முரண்டபட்ட இரண்டு நேர அட்டவணைகள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட தவறு தொடர்பாக கண்டறியப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
Related posts:
|
|