முன்பள்ளிகள் எந்தத் திணைக்களத்தின் கீழ் இயங்குகிறது என்பதைக் கூட உறுதிப்படுத்த தகுதியற்ற அவல நிலையே தொடர்ந்தும் காணப்படுகிறது – பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தலைவர் ஸ்ரீரங்கேஸ்வரன்!

Friday, July 1st, 2016

வடக்கு மாகாணசபை இருக்கிற அதிகாரங்களை திறமையாகச் செயற்படுத்தி அதனூடாக மக்கள் நலப்பணித்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.    மாகாணசபை முன்பள்ளி ஆசிரியைகள் நியமனம் தொடர்பில் எவ்வித அக்கறையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. முன்பள்ளிகள் எந்தத் திணைக்களத்தின் கீழ் இயங்குகிறது என்பதைக்கூட உறுதிப்படுத்த தகுதியற்ற அவலநிலையே தொடர்ந்தும் காணப்படுகிறது என பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தலைவரும் கட்சியின் வடமராட்சி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

புலோலி மேற்கு, பூவக்கரை கலைமகள் முன்பள்ளி விளையாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (2016.06.26) சனசமூக நிலையத் தலைவர் திரு வே.கணநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணசபை 55 அமர்வுகளை நடாத்திவிட்டோம் என அறிக்கை விடுத்து புளகாங்கிதமடைகிறது. ஆனால் இருக்கும் அதிகாரங்களைச் சரிவரப் பயன்படுத்த நிர்வாக ஞானமற்றவர்களாகவே உள்ளனர். கடந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வைத்திய கலாநிதி செந்தூரன் அவர்கள் முன்பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வுகள் பற்றிப் பிரஸ்தாபித்திருந்தார். அதில் மழலைகளின் கல்விச் செயற்பாடுகள், முன்பள்ளி ஆசிரியைகளின் கல்வித் தகுதி, அவர்கள் யாருக்குக் கீழ் இயங்குகிறார்கள்? கல்வித் திணைக்களத்திற்குக் கீழா? பிரதேசசபைக்குக் கீழா? அல்லது முன்பள்ளிகள் சார்ந்த சமூகமட்ட அமைப்பின் கீழா? என்பது தொடர்பில் கேள்வியும் எழுப்பியிருந்தார். ஆனால் பதில் கூறுவதற்கு மாகாண அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் எவருமே கூட்டத்திற்கு வரவில்லை. இவ்வாறான நிலையே காணப்படுகிறது.

இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏழை வறிய கூலித் தொழிலாள மக்களாக உள்ளார்கள். இக்கிராமத்தை எந்த அரசியல் பிரமுகர்களும் கண்டுகொள்ளாத நிலையில் 2001 வருடத்தில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பூவக்கரை கலைமகள் சனசமூக நிலையத்தை அமைப்பதற்கு பாரிய நிதியை வழங்கி இக்கிராம மக்களுக்கு அறிவியல் ரீதியாக வளர்வதற்கான நம்பிக்கையையும் ஊட்டினார்.

தற்போது இம்முன்பள்ளி மழலைகளின் குடிநீர் ஆகார வசதிக்காக, தனது 2016ம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து ரூபா ஒரு இலட்சம் ரூபாவினை ஒதுக்கியுள்ளார். தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு தொடர்ந்தும் உதவிக்கரம் நீண்டு கொண்டே இருக்கும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு வெ.சுப்பிரமணியம், கிராம அலுவலர் செல்வி ச.சிவாஜினி அவர்களும் கௌரவ விருந்தினர்களாக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பி.சிவரஞ்சினி சமுர்த்தி உத்தியோகத்தர் அ.செந்தூரன், முன்பள்ளிப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி வே.தர்சினி, வியாபாரிமூலை குடும்பநல உத்தியோகத்தர் வ.பானுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 8

2

1

5

SAM_5482

6

3

4

Related posts: