முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நிக்கம் – பாதுகாப்பு அமைச்சு!

2020 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த பதவிக்காலத்தின்போது வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளது.
இதற்கமைய 81 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு குறித்தும் விரைவில் அரச உயர்மட்டம் தீர்மானம் எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின்தடை தொடர்பான அறிவித்தல்!
மின் தடை – நாட்டில் மின் பிறப்பாக்கிகளுக்கு கிராக்கி அதிகரிப்பு!
அதி சொகுசு பஸ் சேவைகள் விரைவில் ஆரம்பம்!
|
|