முதலாளிக்கு சமுர்த்தி முத்திரை அவருக்கு கீழ் பணியாற்றுபவருக்கு இல்லை: பாகுபாடு நீக்கப்பட வேண்டும் – யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன்!

சமுர்த்தி முத்திரைகள் பெறுவதை சீராக்கி முத்திரைகள் கிடைக்கப்பெறாது இருப்பவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை பிரதேச செயலர்களால் மேற்கொள்ள முடியுமெனவும் இவற்றுக்குரிய அதிகாரங்கள் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ். செயலகத்தில் நடைபெற்ற வருடாந்த சமுர்த்தி மீளாய்வுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தற்போது குடாநாட்டில் சுமார் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகையினர் சமுர்த்தி முத்திரை பெற்றுவரும் நிலையில் அதற்கும் கூடுதலானோர் முத்திரை பெறாது உள்ளனர்.
இவற்றில் தகுதியானவர்கள் தெரிவுசெய்யப்பட்டு முத்திரை வழங்குவது அவசியமானது. வேலை செய்யும் முதலாளிக்கு முத்திரை இருக்கிறது அவருக்கு கீழ் பணியாற்றும் தொழிலாளிக்கு முத்திரை இல்லை என இருக்கும் நிலையை மாற்றி அமைத்து சமமின்மை நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றார். இதேவேளை அரச அதிபர் இவ்வாறு அறிவித்திருக்கும் நிலையில் முத்திரைகளை மாற்றியமைத்தல் தொடர்பாக கடந்த வருடம் பிரதேச செயலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்ட சுற்றறிக்கைகள் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|