முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கும் ஆங்கிலக் கல்வி அவசியம்!
Thursday, October 5th, 2017நவீன உலகை வெற்றி கொள்ளக்கூடிய தலைமுறையை உருவாக்குவதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைய பாடசாலைகளில் ஆங்கில மொழி கல்வியை மேலும் விரிவுப்படுத்த கல்வி அமைச்சு விசேட அவதானம் செலுத்தியுள்ளது.
இதன்படி முதலம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 2 ஆங்கில பாடப்புத்தகங்கள் அடுத்த வருடம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், தேசிய கல்வி திணைக்களத்தின் ஊடாக பாடப்புத்தகங்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.தற்போது 3 ஆம் தரத்திற்கு மேல் ஆங்கில பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவதுடன், ஆரம்ப பிரிவில் 1 ஆம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கும் உரிய ஆங்கில கல்வியை பெற்று கொடுப்பது இதன் நோக்கமாகும்.மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களுடன் பாடங்கள் தொடர்பான இறுவட்டுக்களையும் பெற்று கொடுக்க கல்வி அமைச்சி அவதானம் செலுத்தியுள்ளது.
Related posts:
|
|