முடிவுக்கு வருகின்றதா கொரோனா வைரஸின் சகாப்தம்? சிங்கப்பூர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவல்!

Tuesday, April 28th, 2020

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் மே மாதம் 20ஆம் திகதிக்குள் பல்வேறு நாடுகளில் இருந்து கட்டுப்படுத்திவிட முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகமான எஸ்.யு.டி.டி தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு சேகரித்த தகவல்களை ஆராய்ந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகம் எளிதில் பாதிக்ககூடிய தொற்று நோய் மாதிரிகளை பகுப்பாய்வு செய்துள்ளது.

அதாவது பல்வேறு நாடுகளை சேர்ந்த சந்தேகத்திற்கிடமான, பாதிக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான நோயாளரிகளின் மாதிரிகள் குறித்த தகவல்களை சேகரித்து ஆராய்ந்து தெரிவித்துள்ளது.

கொரோனா பல்வேறு நாடுகளில் திருப்பங்கள் நிகழ்த்திய திகதிகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதன் பின்னர் இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரவுள்ளதாக எஸ்.யு.டி.டி தனது ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றினால் இந்தியர்கள் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை 931 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 15 பேர் மட்டுமே சிங்கபூரை சேர்ந்தவர்கள். ஏனைய அனைவரும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். சிங்கப்பூரில் பணிக்காக வந்த இந்தியர்களே அவர்கள்.

சிங்கப்பூரில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 50 வீதமானர்கள் இந்தியர்கள் என கூறப்படுகின்றது.

Related posts: