முச்சக்கரவண்டியில் செல்லும் பயணிகளுக்கு டிக்கெட்: ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் அமுல்!

Thursday, April 19th, 2018

முச்சக்கர வண்டியில் செல்லும் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் விதத்தில் மீற்றர் பொருத்தும் சட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக தெருப் போக்குவரத்து தொடர்பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் இந்தச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சந்தையில் இத்தகைய மீற்றர்களைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிரமங்களைத் தவிர்ப்பதற்காக சட்டத்தை உடன் அமுல்படுத்தாமல் 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த கால அவகாசம் ஏப்ரல் 01 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் ஏப்ரல் 20 ஆம் திகதி முதலே அமுலுக்கு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியில் பயணிக்கும் பயணிகளின் முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு இந்தச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் டாக்டர் சிசிர கோதாகொட மேலும் கூறியுள்ளார்.

Related posts: